பிரபல நடிகரின் மகளுக்கு தவறாமல் சர்ப்ரைஸ் கொடுக்கும் விஜய்…!!

விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு எப்போதுமே தரிசனம் தருபவர். படப்பிடிப்புகளில் அவ்வப்போது ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு சந்தோஷத்தையும் கொடுத்து வருகிறார்.

தற்போது நடைபெறும் 63வது பட படப்பிடிப்பு தளத்தில் கூட விஜய் ரசிகர்களை சந்திக்கிறார், அந்த வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்ததை நாம் பார்த்தோம்.

அதேபோல் விஜய் தனது நண்பரும், நடிகருமான சஞ்சீவ் மகளுக்கு எப்போதுமே அவரது பிறந்தநாள் அன்று நேரில் சென்று சர்ப்ரைஸ் கொடுத்து விடுவாராம்.

வெளிநாட்டில் இருந்தால் மட்டுமே வர மாட்டாராம், மற்றபடி இங்கே இருந்தால் வீட்டிற்கு வந்து சஞ்சீவ் மகளுக்கு அவர் சர்ப்ரைஸ் கொடுப்பார் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி,