காதலிய துண்டு துண்டாக வெட்டி சூட்டிகேஸில் அடைத்த காதலன்..!!

திருமணத்துக்கு வற்புறுத்தியதால், காதலியை கொலை செய்ததாக காதலன் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஐதராபாத்தை சேர்ந்த சுனில் என்பவரும், 25 வயதான ஒரு பெண் என்ஜினீயரும் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர்.

அந்த பெண், திருமணம் செய்துகொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்தார். இதனால் சுனில் கோபம் அடைந்தார்.

இதற்கிடையே, கடந்த 4-ந் தேதி, வளைகுடாவில் உள்ள மஸ்கட்டில் ஒரு வேலைக்கு நேர்முக தேர்வுக்கு கூட்டிச் செல்வதாக பெண் என்ஜினீயரின் பெற்றோரை நம்ப வைத்து அந்த பெண்ணை சுனில் அழைத்துச் சென்று கொலை செய்துள்ளார்.

தங்களது மகளை காணவில்லை என பெற்றோர் பொலிசில் புகார் அளித்ததையடுத்து, பொலிசார் பெண் என்ஜினீயரின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை கண்டறிந்து விசாரணை நடத்தினர்.

சுனிலையும் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், பெண் என்ஜினீயரை கொலை செய்துவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

இருவரும் 4-ந் தேதி ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து ஒரு லாட்ஜ்க்கு சென்றுள்ளனர்.

அங்கு மறுநாள், பெண் என்ஜினீயரை சுனில் கொலை செய்தார். உடலை ஒரு சூட்கேசுக்குள் அடைத்து, ஒரு டவுன் பஸ்சிலும், ஒரு டாக்சியிலும் சூட்கேசுடன் பயணம் செய்தார். பின்னர், புறநகரில் உள்ள ஒரு கால்வாயில், உடல் அடைக்கப்பட்ட சூட்கேசை போட்டு விட்டு சென்றுவிட்டார்.