அவர் மட்டும் இல்லனா நான் தற்கொலை செய்திருப்பேன்.! மனோபாலா..

தமிழ்சினிமாவில் தற்போது பல படங்களில் காமெடியனாக நடித்து பிரபலமானவர் நடிகர் மனோபாலா. இவர் ஒருகாலத்தில் இயக்குனராக இருந்து பின்னர் நடிப்பில் இறங்கியவர்.

இயக்குனர் மனோபாலா முதலில் ஆகாய கங்கை என்ற திரைப்படத்தை இயக்கினார் கார்த்தி மற்றும் சுகாசினி நடித்த இப்படம் வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து மனோபாலா பிள்ளை நிலா என்ற படத்தை இயக்கினார். மோகன், ராதிகா, நளினி ஆகியோர் நடித்த இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் மனோபாலாவிடம் அவரது பட அனுபவங்களை குறித்து கேட்டபோது அவர் தனது வாழ்வில் நேர்ந்த கொடுமைகளை கூறியுள்ளார்

நான் இயக்கிய முதல் படம் ஆகாயகங்கை. அந்த படம் தோல்வி அடைந்ததால், எனக்கு அதனை தொடர்ந்து அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் இரண்டு வருடங்கள் வீட்டில் தான் இருந்தேன். கையில் காசே இல்லாமல் கஷ்டபட்டேன். அதனால் சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட எனக்கு தோன்றியது.

அதன்பின் சென்னைக்கு கையில் வெறும் ஒன்னேகால் ரூபாயுடன் வந்தேன். 1 ரூபாய்க்கு ஒரே ஒரு தோசை வாங்கி கையேந்தி பவனில் சாப்பிட்டு கொண்டிருந்தபோது, தயாரிப்பாளர் கலைமணி வந்து எனக்கு படம் இயக்க வாய்ப்பு தருவதாக கூறி. கையில் ஒரு ஐம்பது ருபாய் கொடுத்தார்.

அதன்பின் நான் பிள்ளைநிலா படம் இயக்கினேன். பின்னர் அப்படம் பெரும் வெற்றி பெற்றது. அவர் மட்டும் என்னை கூப்பிடாமல் இருந்திருந்தால் நான் கண்டிப்பாக தற்கொலை தான் செய்திருப்பேன் என மனோபாலா கூறியுள்ளார்.