ஸ்டாலின் முதல் ராசா வரை சிக்கும் முக்கிய புள்ளிகள்!

முன்­னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா­வின் நெருங்­கிய உதவியா­ளராக இருந்த சாதிக்­பாட்சா 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்­கில் சிபிஐ விசாரணை வளை­யத்துக்­குள் கொண்டு வரப்­பட்ட போது, அவர் மர்­ம­மான முறையில் மர­ண­ம­டைந்­தார். தனது கண­வரின் சாவில் மர்­மம் இருப்­பதாக அவரது மனைவி எஸ்.ரேஹா­பானு கூறியுள்­ளார்.

அப்போது பேசிய அவர், இன்­ற­ளவும் என்­னு­டைய உயிருக்கு ஆபத்து நீடிக்­கி­றது. எனது கண­வரின் மர­ணத்திற்கு வெளியில் இருக்­கும் சிலர் தான் கார­ணம்.

ஆகவே எனது கண­வரின் மர்மசாவு தொடர்­பான வழக்கை மீண்டும் சம்­பந்­தப்பட்ட அதிகா­ரிகள் விசா­ரிக்க வேண்டும். எனது கண­வர் உயிருடன் இருந்த போது அவரி­டம் விசா­ரணை நடத்­தப்­பட் டது.

அப்­போது எனது கண­வர் விசா­ரணை அதி­ கா­ரிகளி­டம் வாக்­குமூ­லம் அளித்­தார். அவர் அப்­படி என்ன சொன்­னார் என்­பது குறித்து மறுவிசா­ரணை நடத்­தப்­பட வேண்டும் என்று கேட்­டுக்­கொள்கி­றேன். மு.க.ஸ்டாலின், ஆ.ராசா உட்­பட சில­ரி­டம் எனது கண­வர் அப்­போது பேசியிருக்­கி­றார்.

ஆகவே இதுகுறித்தும் மறுவிசாரணை நடத்­தப்­பட வேண்­டும். 2ஜி ஸ்பெக்ட்­ரம் ஊழலில் குற்­றம் சாட்­டப்பட்­டுள்ள சாகித்பால்­வாவை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசி­னார் என்று விசா­ர­ணையின் போது எனது கண­வர் விசா­ரணை அதி­கா­ரிகளி­டம் தெரிவித்து இருக்­கிறார்.

இதற்கு பிறகு என் கண­வருக்கு மிரட்­டல்­ கள் வரத் தொடங்கின. அவருக்கு மிரட்­டல்­கள் விடுக்­கப்­பட்­டன. இந்த விசா­ரணையின் போது தான் 2011 மார்ச் 11–ம்தேதி எனது கண­வர் மர்­ம மான முறையில் மர­ண­மடைந்­தார்.

எனது கண­வர் மன­வலிமை மிக்­க­வர். ஆகவே அவர் தற்கொலை செய்து கொண்­டார் என்று நான் ஒரு போதும் நம்­ப மாட்­டேன். எனது கண­வர் மர்ம சாவு குறித்து மறு விசா­ரணை நடத்தி­னால் உண்­மை­கள் வெளிவரும்’ என்று கூறியுள்ளார்.