குழந்தையை கொன்றுவிட்டு தாய் செய்த காரியம்!

தேனி மாவட்டத்தில் கணவன் விவகாரத்து கேட்டதால், இளம் மனைவி தன்னுடைய குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரியங்கா என்பவர் தன்னுடைய கணவன் பல்லவராஜனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து 15 மாத பெண் பெண் குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார்.

கணவன், மனைவி இருவரையும் சேர்த்து வைக்க அவர்களுடைய பெற்றோர் தொடர்ந்து முயற்சி செய்து வந்துள்ளனர்.

ஆனால் பல்லவராஜன், மனைவியுடன் சேர்ந்து வாழ தொடர்ந்து மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையில் விவாகரத்து கேட்டு பல்லவராஜன் பிரியங்காவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது சம்மந்தமான வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மனமுடைந்த காணப்பட்ட பிரியங்கா போடியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்றபோது தன்னுடைய குழந்தைக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்த சம்பவத்தில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அதேசமயம் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட பிரியங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.