ஈழத்தமிழனின் திருமணத்தில் காசு வாங்கிக்கொண்டு கலந்துகொண்ட சீமான்?

10.04.2019 அன்று தாயகத்தைச் சேர்ந்த மயூரன் – சிந்துஜா ஆகியோருக்கு ஆற்காடு றோட், வடபழனி, சென்னை, தமிழ்நாடு எனும் முகவரியில் அமைந்துள்ள ஆதித்யா மண்டபத்தில் இடம்பெற்ற திருமண விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் திடீரென வருகை தந்து மணமக்களை ஆசீர்வதித்து அவர்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளார் எனவும்,

மிக வேகமான பாராளுமன்றத் தேர்தல் பரப்புரைகளில் காலநேர அவகாசமின்றி முனைப்புடன் களம் சென்றுகொண்டிருக்கும் திரு சீமான் அவர்கள் இத் திருமணத்தில் திடீரென கலந்துகொண்டது அனைத்துத் தாயகத் தமிழர்களை மகிழ்ச்சியிலும் மணமக்களை நெகிழ்சியிலும் ஆழ்த்தியுள்ளது என சில தினங்களுக்கு முன் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்த நிலையில்,

இது தொடர்பில் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது, அதாவது சீமான் இத்திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்றால் மணமகணை (மயூரன்) சீமானுக்கு இந்திய ரூபாய் ஒரு இலட்சம் அன்பளிப்பு வழங்குங்கள் என சீமானின் pro தெரிவித்ததாகவும் அதனடிப்படையில் குறித்த தொகையை சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு வழங்கியிருந்த நிலையிலேயே சீமான் குறித்த திருமணத்தில் கலந்துகொண்டதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.