மைதானத்திற்குள் சிங்கம்போல வந்து சண்டை போட்ட தோனி!

ஐபில் போட்டியின் 12 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 25வது லீக் போட்டியில் ராஜஸ்தான், சென்னை அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனடுத்து துவக்க வீரர்களாக களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் ரஹானே, பட்லர் ஆரம்பத்திலே சொதப்பியபடி ஆடினார். ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது.

152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் துவக்க வீரர்கள் மோசமான முறையில் ஆடினர். சென்னை அணியில் அதிகபட்சமாக அம்பத்தி ராய்டு சிறப்பாக ஆடி 47 பந்துகளில் 57 ரன்களும் தல தோனி 43 பந்துகளில் 58 ரன்கள் அதிரடியாக அடித்து அவுட் ஆகினர்.

4 பந்துகளில் 8 ரன்கள் வேண்டிய நிலையில் சாண்ட்னெர் களத்தில் நின்றார். ஸ்டோக்ஸ் வீசிய மூன்றாவது பந்து சாண்ட்னெர் தோள்பட்டைக்கு மேல் சென்றதால் மெயின் அம்பையர் நோ பால் என அறிவித்தார். ஆனால் நோ பால் இல்லை என லெக் அம்பயர் தெரிவித்தார். அம்பையர்களின் இந்த மாறுபட்ட முடிவால் களத்தில் நின்ற ஜடேஜா லெக் அம்பையருடன் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்.

இதனை கவனித்து கொண்டிருந்த சென்னை அணியின் கேப்டன் தல தோணி மைதானத்திற்கு உள்ளே வந்து நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எப்பவுமே கூலாக ஊருக்கும் தல தோணி நடுவர்களின் மாறுபட்ட முடிவால் மிகவும் கோபமாகி, வாக்குவாதத்தில் ஈடுபட்டது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது.

இறுதி ஓவரின் இறுதி பந்தில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான சூழ்நிலையில் சென்னை அணி இருந்தது. இறுதி பந்தினை ஸ்டோக்ஸ் சாண்ட்னருக்கு வீசினர். சாண்ட்னர் பந்தை சிறப்பாக கணித்து சிக்ஸர் அடித்து சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.