முருகன் – நளினி குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக வேலூர் சிறையில் இருக்கும் நளினி தனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக பரோல் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

லண்டனில் வசிக்கும் எனது மகள் ஹரிதாவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய 6 மாதம் பரோல் வழங்க வேண்டும் என்றும் நேரில் வாதாட அனுமதிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி கோரிக்கை வைத்துள்ளார்.

அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

மேலும், அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பரோல் கேட்டு கொடுக்கப்பட்ட மனுவை வேலூர் சிறை நிர்வாகம் பரிசீலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.