முதலமைச்சருக்கு போலீஸ் கமிஷனர் அனுப்பிய நோட்டீஸ்… 6 நாட்கள் கால அவகாசம்.!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் காங்கிரஸ், ஜனதாதளம் கட்சியின் நிர்வாகிகள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் கட்சியை சார்ந்தவர்கள் குறி வைத்து நடத்தப்பட்டன, காங்கிரஸ் தலைவர்களும் மற்றும் ஜனதாதளம் தலைவர்களும் குற்றம்சாட்டினார். சோதனை நடைபெற்ற ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகளை கண்டித்து, பெங்களூரில் உள்ள வருமானவரித்துறை அலுவலகம் முன்பு முதலமைச்சர் குமாரசாமி, துணை முதலமைச்சர் பரமேஸ்வர், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்களும் இரு கட்சி நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமாருக்குர், வருமான வரி துறை இயக்குனர் பாலகிருஷ்ணன் புகார் கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதம் மாநிலம் காவல் டிஜிபி நீலமணி ராஜுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் டிஜிபி உத்தரவின்பேரில் வருமானவரித்துறை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ், ஜனதாதளம் கட்சி நிர்வாகிகள் பலர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் முதலமைச்சர் குமாரசாமி, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை, அதே நேரத்தில் இந்த வழக்கு குறித்து விசாரிக்க பானசாவடி உதவி போலீஸ் கமிஷனர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் வருமானவரி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி முதலமைச்சர் குமாரசாமி, சித்தராமையா உள்ளிட்ட தலைவர்களுக்கு போலீஸ் கமிஷனர் நோட்டீஸ் அனுப்பி வைத்து அனுப்பி உள்ளார்.

மேலும் விசாரணைக்கு ஆஜராக ஆறு நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது முதலமைச்சர் குமாரசாமி, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அவர்களுக்கு போலீஸ் நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.