நேற்று நடத்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம், அதிரடி மாற்றம்!

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 26 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் சென்னை, கொல்கத்தா, மும்பை மற்றும் டெல்லி அணிகள் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் உள்ளது.

இந்த தொடரில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதிபெற முடியும் என்பதால் அணைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகிறது.

இந்நிலையில், சென்னை அணி இதுவரை நடந்த 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றிபெற்று முதல் இடத்திலும், 7 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றிபெற்று கொல்கத்தா இரண்டாவது இடத்திலும், மும்பை அணி இதுவரை நடந்த 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றிபெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளது. இதுவரை நடந்த 7 போட்டிகளில் தலா நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

இந்நிலையில் நேற்று கொல்கத்தா, டெல்லி அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதில் 6 இடத்தில் இருந்த டெல்லி அணி தற்போது நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பஞ்சாப் அணி ஐந்தாவது இடத்திலும், கைதராபாத் அணி 6 வது இடத்திலும் உள்ளது.