மகளின் மீது பரபரப்பு புகார்!

தமிழ் சினிமாவில் காதலே நிம்மதி, உதவிக்கு வரலாமா போன்ற படங்களின் மூலம் அறிமுகமானவர் நடிகை சங்கீதா. இவர் பிதாமகன் படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் மக்களிடையே பிரபலமானார்.

அதனை தொடர்ந்து சங்கீதா தமிழில்,காளை, உயிர், தனம் மன்மதன் அம்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பாடகர் கிரிஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேலும் பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இவர் நடுவராகவும் இருந்து வந்தார்.

இந்நிலையில் தற்பொழுது சங்கீதா மீது அவரது தாயார் பானுமதி மகளிர் ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தான் தற்பொழுது தனது மாமனாருக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருகிறேன்.அந்த வீடு சங்கீதா பெயரில் உள்ளது. மேலும் அந்த வீட்டில் தரைத்தளத்தில் தானும், மாடியில் சங்கீதாவும் குடியிருக்கிறோம்.

இந்நிலையில் அவரது சகோதரர்கள் வீட்டை அபகரித்துவிடுவார்கள் என்ற பயத்தில் சங்கீதா பானுமதியை வீட்டை விட்டு வெளியேற கூறியுள்ளார் மேலும் வயதான நிலையில் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட நிலையில் எங்கே செல்வது என அவர் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நேரில் ஆஜராகுமாறு சங்கீதாவுக்கு சம்மன் அனுப்பியது தொடர்ந்து சங்கீதா தனது கணவர் க்ரிஷ் உடன் ஆஜரானார்.அப்போது செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, சினிமா தொடர்பான விஷயம் என்றால் பேசலாம் இது எனது சொந்த விஷயம் இதனை பற்றி பேச எனக்கு விருப்பமில்லை என்று பதிலளித்து சென்றுள்ளார்.