உதயநிதிக்கு சவால் விட்ட கேப்டன் மகன்.!

வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக தீவிர பிரசாரம் செய்து வருகிறது. விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் அழகர்சாமியை ஆதரித்து. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தே.கல்லுப்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியவை, இது எங்களுடைய பூர்வமான தொகுதி, ஆகியதால் தான் கேப்டன் இந்த தொகுதியை கேட்டு வாங்கி உள்ளார். கடந்த தேர்தலில் கேப்டன் பிரச்சாரம் செய்த வாகனத்தில் நான் இப்போது பிரச்சாரம் செய்கிறேன். கேப்டன் நன்றாக உள்ளார். அவர் விரைவில் குணமடைவது உங்கள் கையில்தான் உள்ளது. நீங்கள் தேமுதிக வெற்றி பெற செய்து மக்களவைக்கு அனுப்பினால் இந்த மகிழ்ச்சியோடு விரைவில் அவர் குணமடைந்து விடுவார்.

10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாதபோது துரைமுருகன் வீட்டில் கட்டுகட்டாக பணம் சிக்கியுள்ளது. இது 2ஜியில் கொள்ளையடிக்கப்பட்ட பணம். 2ஜி வழக்கில் இருந்து தப்பிக்க இலங்கை தமிழர்களை கொலை செய்தது காங்கிரஸ், இதற்கு திமுக உடந்தையாக இருந்தது. பிரதமர் வேட்பாளர் யார் என்று கூற தைரியமில்லாத கூட்டணி திமுக-காங்கிரஸ் கூட்டணி தான்.

8 வழி சாலை குறித்து விவாதிக்க தயார் என்று அன்புமணியிடம் உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டுள்ளார். இப்போது நான் ஒரு சவால் விடுகிறேன். இலங்கை ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்யப்பட்டது, குறித்து என்னிடம் விவாதிக்க தயாரா? என அவர் கேட்டுள்ளார்.