தொடர்ந்து அசத்தும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்!

ஐபில் போட்டியின் 12 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது. 23 வது போட்டியானது சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இடையே நேற்று சென்னையில் நடைபெற்றது.

கொல்கத்தா அணியின் வீரர்கள் சொற்ப ரன்னில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொல்கத்தா அணியின் லின் மற்றும் ராணா இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர். அந்த அணியின் அதிரடி மட்டையாளர் ரஸ்ஸல் நேற்றைய ஆட்டத்தில் 44 பந்துகளில் 50 ஓட்டங்கள் பெற்றார். இதுவே அந்த அணி வீரர்களில் அடித்த அதிக ரன் ஆகும்.

இந்தநிலையில் இன்றைய 24 வதுலீக் போட்டியில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து பஞ்சாப் அணியில் துவக்க மட்டையாளர்களாக களமிறங்கிய கிறிஸ் கெயில் மற்றும் லோகேஷ் ராகுல் ஆரம்பத்திலிருந்து சிறப்பாக ஆடிவருகின்றனர். இதுவரை 12 ஓவர்கள் நிறைவுற்ற நிலையில் கிறிஸ் கெயில் 36 பந்துகளுக்கு 63 ரன்கள் எடுத்து அவுட்டா ஆனார். லோகேஷ் ராகுல் 41 பந்துகளில் 50 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் ஆடிவருகின்றார். 13 ஓவர்கள் நிறைவுற்ற நிலையில் பஞ்சாப் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்துள்ளது.