சென்னையில் ஆட எங்களுக்கு விருப்பமில்லை.. தோனி பரபரப்பு பேட்டி.!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த சென்னை-கொல்கத்தா அணிகளுக்கான போட்டி குறித்து சென்னை அணியின் கேப்டன் தெரிவிக்கையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் ஆடுகளம் சரியில்லை. இது மந்தமான ஒரு ஆடுகளமாக உள்ளது, என்று தெரிவித்துள்ளார்

இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துள்ள போட்டிகளின் சராசரி ரன்ரேட் 6.57 ஆகும். மற்ற அனைத்து மைதானங்களில் ரன்ரேட் 7-க்கு குறைவாக இல்லை.

முன்னதாக பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது தோனி, சென்னை ஆடுகளம் சரியில்லை என்று முன்னவே தனது அதிருப்தியை தெரிவித்து இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் சென்னை அணி கொல்கத்தா அணியுடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் இரண்டு அணி வீரர்களும் ரன் எடுக்க சிரமப்பட்டனர். இருப்பினும் சென்னை அணி இறுதியில் வெற்றி பெற்றது. இது குறித்து தனது கருத்தை தெரிவித்த தோனி, சென்னை ஆடுகளம் சரியில்லை என்று மீண்டும் தனது அதிர்ப்பித்தியை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ”பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி, 70 ரன்னில் எங்களிடம் சுருண்டது. அது போலவே கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியும் அமைந்து விட்டது. சேப்பாக்கம் ஆடுகளம் குறித்து புகார் இருந்தாலும், நாங்கள் வெற்றியும் பெற்று விடுகிறோம்.

இது போன்ற ஆடுகளங்களில் நாங்கள் விளையாட விரும்பவில்லை. எதற்கு காரணம், இந்த ஆடுகளத்தில் மிகவும் குறைந்த ஸ்கோரே எடுக்க முடிகிறது. எங்களது வீரர்களுக்கும் ரன்கள் எடுக்க கடினமாக உள்ளது. முதலில் பேட் செய்யும் அணிக்கு மிகுந்த சிரமம். இரண்டாவது பத்தியில் கூட, பனிப்பொழிவினால் ஓரளவு ஆடுகளம் பேட்டிங்குக்கு எளிதாக இருக்கும்” என்று அந்த பேட்டியில் தோனி தெரிவித்துள்ளார்.