அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளது.! தேர்தலை நிறுத்துங்கள்.!! நீதிமன்றம் சென்ற வேட்பாளர்.!

வரும் மக்களவை தேர்தல் வாக்கு பதிவுக்கு இன்னும் ஒரு வரமே உள்ள நிலையில், மதுரை மக்களவை தொகுதி சுயேச்சை வேட்பாளர் கே.கே.ரமேஷ் அவர்கள், இந்த தேர்தலை உடனே நிறுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மதுரை மக்களவை தொகுதியில், அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன், திமுக கூட்டணி சார்பில் சு.வெங்கடேசன், அமமுக சார்பில் டேவிட் அண்ணாதுரை ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், மதுரை மக்களவை தொகுதி சுயேச்சை வேட்பாளர் கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார், அந்த மனுவில், ”மதுரை மக்களவை தொகுதியில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் உணவு பொருட்கள் வழங்குகின்றனர்.

இதற்கு என்னிடம் ஃபோட்டோ ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த தொகுதியில் தேர்தல் நியாயமாக நடைபெறுவதற்கான சூழல் இல்லை. இதனால், தேர்தல் நிறுத்தி வைக்கப்படுவதே சரியான முடிவு” என்று தெரிவித்துள்ளார்.