வீதியில் பிச்சை எடுத்த முன்னாள் போராளிக்கு ஈழத்தமிழர் செய்த செயல்!

யாழ் நல்லூரின் வீதியில் பிச்சை எடுத்த முன்னாள் போராளிக்கு கடை அமைத்து கொடுத்து முதலாளி ஆக்கி அழகு பார்த்துள்ள புலம்பெயர் தமிழ்க் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

நல்லூரின் முன் வீதியில் பிச்சை எடுத்து குடும்ப வாழ்விலை மேற்கொண்டிருந்த முன்னாள் போராளிக்கு யாழ் எய்ட் ஊடாக யாழ் பரியோவான் கல்லூரகா.பொ.த உ/த 96ஆம் ஆண்டு மாணவனும் கனடா வாழ் புலம்பெயர் ஈழத்தமிழருமான திரு கொட்வின் தினேஸ் தனது மனைவி நீரு தினேஷின் பிறந்த நாளையொட்டி, கடை கட்டி கொடுத்தும் மத்தியின் மைந்தனும், வானொலி அறிவிப்பாளருமான பாலா ஊடாக GOLDEN MEMORIES அமைப்பினர் கடைக்கான முழுமையான பொருட்களையும் மற்றும் இதர பொருட் கொள்வனவுக்குரிய பணத்தினை வழங்கியும் உதவி உள்ளதுடன் யாழ் எய்ட் குளிர்சாதன பெட்டி, மேசை, கதிரை,தராசு போன்ற பொருட்களை வழங்கியும் வாழ்வியல் மேம்பாட்டிற்கு காத்திரமான உதவிகளை வழங்கி உதவியுள்ளார்கள்.

வெள்ளாங்குளத்தினைச் சேர்ந்த முன்னாள போராளி மிக இளவயதிலேயே போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திநெருப்பாற்றில் தீக்குளித்து ஆனையிறவு மீட்புச்சமரில் காலிலும் கையிலும் காயமுற்றும், பின்னர் நடந்த சண்டை ஒன்றிலே இராணுவ முற்றுகை ஒன்றில் இருந்து தப்பிக் முடியாமல் சரணடையக் கூடாது என்ற ஓர்மத்துடன் சயனைட் கடித்தும், இன்று இதனால் பேசும் திறன் ,நடக்கும் திறன் இழந்து எது வித வருமானமும் இன்றி, கட்டிய மனைவியையும் பெற்ற மூன்று பிள்ளைகளையும் வாழ வைப்பதற்காக வெள்ளாங்குளத்தில் இருந்து தங்கத்திலே கலசம் வைத்த முருகனின் வாயிலிலே கலசமாக இருக்க வேண்டியவன் ஏன் சந்நிதானத்திலே பூஐிக்க வேண்டியவன் பிச்சை எடுக்கின்ற அவலம்.

பாவம் தொலைய வழிபாடு ஆற்ற வருபவர்கள் பெரிதாக கண்டு கொண்டதாக தெரியவில்லை. நல்மனம் கொண்ட ஓரிருவர் சிறு சிறு உதவிகள் புரிந்துள்ளனர்.ஆனால். பிச்சை எடுக்காமல் வாழ வழி ஏற்படுத்தாமை கவலைக்குரியது.