செம்ம ஆட்டம் போட்ட தோனி மகள்! வைரலாகும் வீடியோ!

2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நேற்று முன் தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இது ஐபிஎல் T20 தொடர் 12வது சீசன் ஆகும். சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்த முதல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான ‘நடப்பு சாம்பியன்’ சென்னை அணியும், கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் ஆடியது

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியின் துவக்க மட்டையிட்டாளர்கள் பார்திவ் பட்டேல், கேப்டன் கோலி களமிறங்கினர். விராட் ஆரம்பத்திலே சொதப்பிய நிலையில் 12 பந்துகளுக்கு 6 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.

இதனையடுத்து அடுத்தடுத்த வந்த மட்டையாளர்கள், கடகடவென அவுட் ஆகி 17.1 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து பெங்களூரு அணி 70 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 71 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றிபெற்றது. ஆனாலும் இந்த ஆட்டத்தில் கஷ்டப்பட்டு வெற்றி பெற்றது.

இந்நிலையில், தோனிக்கு மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டம் தமிழகத்தில் உள்ளது. அந்த வகையில் தோனி சிஎஸ்கே மேட்ச் எங்கு நடந்தாலும் தன் மகளை அழைத்து வருவார்.

அப்படி நேற்று முன் தினம் தொடங்கிய ஐபிஎல் போட்டிக்கு தோனி மகள் எண்ட்ரீ கொடுத்து இருந்தார். அவர் தல பாடலான ஆலுமா டோலுமா போடும் போது எழுந்து நின்று நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.