“ஒரு புகைப்படத்தில் எனது குடும்பத்தை அடக்க முடியாது” கனிமொழி!

மக்களவைத் தேர்தல் நடக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதிமுக, திமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து, பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.

ஒவ்வொரு வேட்பாளரும் தனது தொகுதியிலும், தனது கூட்டணிக் கட்சிகள் நிற்கும் தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொரு வேட்பாளரையும் ஆதரித்து வாக்கு சேகரித்து வருகின்றன.

இந்நிலையில், திமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், விளாத்திகுளம் அருகே இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக கனிமொழி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அந்த உரையில், “எனது குடும்பத்தை ஒரு புகைப்படத்தில் அடக்க முடியாது” என கலைஞர் கருணாநிதி எப்போதும் சொல்வார். எல்லா தமிழர்களையும் அடக்கியது எனது குடும்பம்.

கூட்டணி கட்சி வேட்பாளராக இருந்தாலும் சரி, நமது திமுக வேட்பாளராக இருந்தாலும் சரி எப்பொழுதும் நாடும் நமதே! நாற்பதும் நமதே! என்ற உணர்வோடு நாம் பணியாற்ற வேண்டும்.

விளாத்திகுளம் இடைத்தேர்தல் மிக முக்கியமானதாகும்.இந்த தேர்தலில் மக்கள் திமுக விற்கு வாக்களிக்க தயாராக இருக்கின்றனர். அதிமுக பாஜக கூட்டணி நிச்சயம் தோல்வியை தழுவும்” என அவர் கூறினார்.