பெரிய திரையை ஜொலிக்கவைக்க வரும் வாணி போஜன்.!

திரைத்துறையில் இருக்கும் சின்னத்திரையில் நடித்த பல நடிகர்கள் பெரிய திரையில் அறிமுகமாகி பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர். அந்த வகையில் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது நல்ல நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன்., மா.க.பா ஆனந்த் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் உள்ளனர்.

அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் உள்ள பிரபல நாடகத்தில் நடித்து வந்த வாணி போஜன் தற்போது திரையில் அறிமுகமாகவுள்ளார். நடிகர் வைபவ் நடிக்கும் சிக்ஸர் திரைப்படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் எஸ்.ஜி.சார்லஸ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் பளாக் லால்வானி நடிகர் வைபரவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் இணைந்து நடிகை வாணி போஜன் நடிக்கிறார்.

திகிலுடன் கூடிய படமாக உருவாகும் இந்த படத்தில் இணைந்து நடிக்கும் வாணி போஜன் இந்த தகவலை தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளார். சின்னத்திரையில் தனது நடிப்பால் பல இளைஞர்களையும்., பல குடும்பத்தார்களையும் கவர்ந்த வாணிபோஜனின் படத்தை மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பார்கள் என்று தான் கூற வேண்டும்.