பிரித்தானிய இளவரசர் கடற்கரை ஓரத்தில் காதல் மனைவியுடன்!

பிரித்தானிய இளவரசர் சார்லஸ் மற்றும் கமீலா சார்லஸ் ஆகிய இருவரும் அரசமுறை சுற்றுப்பயணமாக கரீபியன் தீவான Grenada – க்கு சென்றுள்ளனர்.

பிரித்தானிய அரசின் வேண்டுகோளுக்கிணங்க இருநாடுகளுக்கிடையே கலாசார உறவுகள் மற்றும் அரசியல் ரீதியான உறவுகளை வலுப்படுத்தும் பொருட்டு இந்த சுற்றுப்பயணத்தை சார்லஸ் மேற்கொண்டுள்ளார்.

தீவின் உள்ளூர் வேளாண்மை, கோகோ மற்றும் மசாலா உற்பத்தியின் வரலாற்றை பற்றிய அரச தம்பதிகள் அறிந்துகொண்டனர்.

இந்த பயணத்தின்போது இளவரசர் தன்னுடன் பள்ளியில் பயின்ற மாணவியின் மகளை சந்தித்துள்ளார். மேலும் சுற்றுப்பயணத்திற்கு இடையே இளவரசர் சார்லஸ் தனது மனைவி கமீலாவுடன் அந்நாட்டின் பிரபலமான sandy கடற்கரைக்கு சென்றுள்ளார்.

அங்கு இவர்கள் இருவரும், காதல் ததும்ப அழகான நீல கடலை ரசித்தபடி நடந்து செல்லும் புகைப்படங்கள் அந்நாட்டு மக்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.