“அசால்ட்டு தல”!! வேற லெவல் க்ளைமாக்ஸ்!

சமீப காலமாகவே அரசியலில் இணையத்தின் பங்கு தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது. மேலும், இது பல அரசியல் கட்சிகளுக்கு சாதகமாகவும், சிலநேரங்களில் பாதகமாகவும் இருக்கிறது.

காரணம் மக்கள் உண்மை செய்தி எது? பொய்யான தகவல் எது? என அடையாளம் காண முடியாத அளவுக்கு வதந்திகளை உண்மைகளை போல பரபரப்பை ஆரம்பித்துள்ளனர்.

இருப்பினும், சில விஷயங்களில் அரசியல் கட்சிகள் செய்யும் தவறுகள் தீயாக பரவுவதால் அரசியல் வாதிகள் அடியெடுத்து வைப்பதை கூட கவனமாக தான் செய்ய வேண்டியுள்ளது.

அது போல அரசியல் தலைவர்களை கலாய்த்து சில குறும்படங்களும் தயாரிக்கப்பட்டு அவ்வப்போது இணையத்தில் வைரலாக்குவது வழக்கம். அது போன்று ‘அசால்டு தல’ என்ற குறும்படம் அரசியல் கட்சி பிரமுகர்களை வெகுவாக கலாய்த்து உள்ளது.

இந்த படம் முழுக்க முழுக்க கிண்டலும், கேலியும் நிறைந்து காணப்டுகிறது. இது யூட்யூப், பேஸ்புக் மற்றும் வாட்சப் போன்ற வலைத்தளங்களில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

குறும்படங்களின் தயாரிப்பு நிறுவனமான மஞ்சள் புரொடக்சனின் தயாரிப்பில் உருவாகி உள்ளது. அதிகபடமாக ஐந்து நிமிடம் மட்டுமே ஓடும் இந்த குறும்படம் நமக்கு சிரிப்பையும், சிந்தனையும் உருவாக்குமாறு அமைத்துள்ளது.

நாட்டில் நடக்கும் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை திரையிட்டு காட்டுகிறது. அதிலும் கடைசியாக இடம்பெற்றுள்ள சிசிடிவி காட்சி யாருமே எதிர்பார்க்காத வண்ணம் அமைத்துள்ளது ‘சத்தியமா வேற லெவல்’ என்கின்றனர் இணையவாசிகள்.

‘அசால்டு தல’ அரசியலில் அண்மைக்காலத்தில் சில!