பாணந்துறையில் பதற்றம்! முஸ்லிம் – சிங்களவர் மோதல்!

பாணந்துறை சரிக்கமுல்ல திக்கல பகுதியில் வாகன விபத்துச் சம்பவம் ஒன்றையடுத்து முஸ்லிம் இளைஞரின் வீடு மீது சிங்களவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது

இதனையடுத்து ஏற்பட்ட இரு தரப்புத் தாக்குதல்களால் பலர் காயமடைந்துள்ளனர்

மேல்மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி, நாடாளுமன்ற உறுப்பினர் பௌசி ஆகியோர் பிரச்சினையில் உடன் தலையிட்டு பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பில் விசேட அதிரடிப் படையினர் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் களமிறக்கப்பட்டதைத் தொடர்ந்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

தாக்குதலில் காயமடைந்த முஸ்லிம்களை வைத்தியசாலையில் அனுமதிக்க சிலர் இடையூறு விளைவித்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை  விபத்து மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நான்கு முஸ்லிம் இளைஞர்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்