பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த சோகம்!

பாடசாலை நிறைவடைந்து விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவர் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

மொரட்டுவையில் உள்ள பிரின்ஸ் ஒப் வோல்ஸ் கல்லூரியில் கல்வி கற்று வந்த மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த மாணவர், காற்பந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை, மயக்கமடைந்து கீழே விழுந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உயிரிழந்துள்ள மாணவரின் சடலம் தற்போது பாணந்துறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.