திருமண ஏற்பாட்டால் இளம் யுவதி விபரீத முடிவு! அதிர்ச்சியில் பெற்றோர்

திருகோணமலையின் கந்தளாய் – பேராறு பகுதியில் 40 மாத்திரைகளை உட்கொண்ட யுவதியொருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பேராறு பகுதியைச் சேர்ந்த ஏ.எம்.றிகானா என்ற 27 வயதுடைய பெண்ணே நேற்றிரவு மாத்திரைகளை உட்கொண்டுள்ளார் என தெரியவருகிறது.

குறித்த பெண் இன்று காலை எழும்பாத நிலையில் பெற்றோர் சென்று பார்த்த போது மயக்கமாக உடல் குளிர்ந்து காணப்பட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.இதன் பின்னர் அவர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீரிழிவு நோய்க்கு உட்கொள்ளும் மாத்திரைகள் உள்ளிட்டவற்றையே அந்த பெண் உட்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை திருமண பேச்சுவார்த்தை தொடர்பான விரக்தியின் காரணமாக அந்த பெண் மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் வைத்தியசாலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.