சில மணித்தியாலங்களுக்கு முன் நடைபெற்ற கோர விபத்து…

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் கலா ஓயா பகுதியில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு ​நேர் மோதிக் கொண்டதில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 11.45 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பற்ற முறையில் லொறி ஒன்று பாதையில் குறுக்க பயணித்ததன் காரணமாக ,குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த பேருந்து ஒன்றும், அநுராதபுரத்தில் இருந்து கலா ஓயா நோக்கி பயணித்த பேருந்து ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளது. சம்பவம் தொடர்பில் இராஜாங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.