சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட, முக்கிய நிர்வாகி!

வரும் 17 வது மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி ஒன்று அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என் ஆர் காங்கிரஸ், தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது.

திமுக தலைமையில் ஒரு கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் கட்சி, ஐஜேகே, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது.

வரும் பாராளுமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை. 40 தொகுதிகளிலும், இடைத்தேர்தலில் 21 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் என்று இக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கிரிபாபு, அவர் வகித்து வந்த மாவட்ட செயலாளர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதாக, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.