பௌத்த சமய முறைப்படி நடந்த முஸ்லிம்…. இறுதிச் சடங்கு!

குளியாப்பிட்டி வீரபொக்குன தேசிய முஸ்லிம் பாடசாலையில் கல்வி கற்று வந்த மாணவன் ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த 15 ஆம் திகதி இரவு 7 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

எம்.எல்.டில்ஷான் கான் என்ற பாடசாலை மாணவனே இந்த விபத்தில் உயரிழந்துள்ளார். மாணவனின் இறுதிச் சடங்கு அவர் படித்த பாடசாலையில் நடைபெற்றுள்ளது. மாணவனின் இறுதிச் சடங்கை பௌத்த சமய முறைப்படி நடத்த பாடசாலையில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இறுதிச் சடங்கில் பௌத்த பிக்குகள் மற்றும் இஸ்லாமிய மௌலவிகள் உட்பட அனைவரும் இன, மத பேதமின்றி கலந்துக்கொண்டுள்ளனர்.

இசை வாத்தியங்களை வாசிப்பதில் திறமை பெற்றிருந்த இந்த மாணவன், கிராமத்து மக்கள் மத்தியில் அன்புக்குரிய சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தார் என கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.