பொள்ளாச்சி வன்கொடுமை! ஆக்ரோஷமாக ஸ்ரீ ரெட்டி வெளியிட்ட வீடியோ.!

பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட காமக்கொடூர கும்பல் 7 ஆண்டுகளாக சமூகவலைத்தளங்கள் மூலம் 200க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி அவர்களை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து, மேலும் அதனை வீடியோவாக எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் வீடியோவும் வெளியானது. அந்த வீடியோவில் இருந்து வந்த அந்த பெண்ணின் அலறல் பலரின் நெஞ்சையும் பதைபதைக்க வைத்தது. இதற்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டுமெனவும் குரல்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில் சினிமா வைப்பிற்க பெண்களை படுக்கைக்கு அலைக்கும் உள்ளது என கூறி டாமில், தெலுங்கு என பல பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய நடிகை ஸ்ரீரெட்டி ஆவேசமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பெண்கள் இது போன்ற குற்றச்சம்பவங்களை மூடி மறைக்காமல் தைரியமாக வெளிப்படுத்த வேண்டும்.இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து நான் போராட முடிவு செய்து இருக்கிறேன்.

விரைவில் போலீஸ் அதிகாரிகளையும் அரசியல் வாதிகளையும் இந்த பிரச்சினை தொடர்பாக சந்தித்து பேச இருக்கிறேன். பாதிக்கப்பட பெண்களையும் நேரில் சந்திக்க விரும்புகிறேன்.

நம் நாட்டில் இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும். அதற்கான சட்டங்களை உருவாக்க வேண்டும்.அப்படி செய்தால்தான் இதுபோன்ற குற்றங்களை தடுக்க முடியும் என கூறியுள்ளார்.