ஏன் பங்குனி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்யவே கூடாது?

தமிழ் மாதங்களில் கடைசி மாதமாகிய பங்குனி மாதம் ஆகும். இந்த பங்குனி மாதம் நமக்கு மங்காத புகழையும், செல்வத்தையும் தந்தருளும்.

பங்குனி மாதத்தில் கிரகப்பிரவேசம் செய்வதில்லை ஏன் தெரியுமா இங்கு பார்ப்போம்!

புதிய வீடு கட்ட பூமி பூஜை செய்தல், புதிய வீடு வாங்குதல், பால்காய்ச்சுதல், கிரகப்பிரவேசம் என குடியிருக்கும் வீடு சார்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் பங்குனியில் செய்வதில்லை.

பங்குனி மாதத்தில் வாஸ்து பகவான் முழிப்பதே இல்லை. பூமிக்கடியில் உறங்கிக்கொண்டே இருப்பார். இதனால் வாஸ்து பூஜை செய்ய இயலாது. மீறி வீடு கட்ட தொடங்கினால் வாஸ்து பகவானின் கோபத்திற்கு உள்ளாக நேரும்.