குழந்தைகளையும் சும்மா விடுவதில்லை.. தவிச்ச வாயிக்கும் வழியில்லை..!

மதுரை கிழக்கு தாலுகா, 52 வார்டுகீழ சந்தைப்பேட்டை பகுதியில் மாநகராட்சி கழிவு நீர் சேகரிப்பு நிலையம் உள்ளது.

இதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு 4, 5 நாட்களுக்கு ஒரு முறை தான் மாநகராட்சி மூலம்குடிநீர் வழங்கபடுகிறது. அப்படி வழங்கும் குடிநீரும் சாக்கடை கலந்த நாற்றத்துடன் வருகிறது.

இதனால் இப் பகுதி மக்கள் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பலவிதமான நோய்கள் ஏற் பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். காசுகொடுத்து மினரல் வாட்டர் வாங்கி குடிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.

ஏழை எளிய மக்களுக்குஅன்றாட வாழ்க்கையை நகற்றவே பெரும் சிரமப்பட்டு கொண்டு இருக்கும்போது குடிநீர் தேவைக்காக பணம் செலவு செய்ய முடியாத நிலையில் உள்ளனர். மாநகராட்சி குடிநீரை நம்பியே பெரும்பாலோனோர் உள்ளனர்.

மேலும் இப்பகுதியில் தெருநாய் கள் தொல்லையும் அதிகமாக உள்ளன.ரோட்டில் நடந்து செல்பவர்களை விரட்டி துரத்தி வருகின்றன. இரு சக்கரவாகனத்தில் செல்வோர்களை துரத்துவதால் வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது.

குறிப்பாக குழந்தைகள் தெருக்களில் விளையாடவோ, கடைகளுக்கு செல்லவோபயப்படுகிறார்கள்.

பெரியவர்களையே துரத்தும் தெருநாய்கள் ஓடி விளையாடும் குழந்தைகளை சும்மா விடுவதில்லை.

ஆகவே மாநகராட்சி அதிகாரிகள் சுகாதாரமான குடிநீர் வழங்கவும், தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.