இன்னொரு பொள்ளாச்சி.. தொடர் பலி.. இளம்பெண்கள் மாயம்..!

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே விட்டல்நாயக்கன்பட்டியில் தனியார் பஞ்சாலை விடுதியில் தங்கி பணியாற்றிய இளம் பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடலூர் மாவட்டம் புவனரியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவது மகள் ஜெயபாரதி(17). இவர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள விட்டல்நாயக்கன்பட்டியில் தனியார் பஞ்சாலையின் விடுதியில் தங்கி பணியாற்றி வந்தார். கடந்த 8 ஆம் தேதியன்று விடுதியில் இருந்து ஜெயபாரதி மாயமானார்.

இது குறித்து பஞ்சாலை நிர்வாகத்தினர் செல்வராஜிக்கு தகவல் அளித்தனர். உறவினர்கள் மற்றும் தோழிகளின் வீடுகளில் தேடியும் ஜெயபாரதி கிடைக்கவில்லை.

இதனையடுத்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் செல்வராஜ் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துஜெயபாரதியை தேடிவருகிறார்கள்.

தனியார் பஞ்சாலைகள் மற்றும் விடுதிகளில் நடைபெறுகின்ற மர்மமான சம்பவங்கள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி,போராட்டங்களை வருகின்றன.

ஏற்கனவே இங்கு பல மர்ம மரணங்கள் நடைபெற்றுள்ளதாகவும், பல சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.