வெற்றிலை பாக்கினை விற்பனை செய்வதற்கு தடை!

அரச நிறுவன வளாகங்களில் வெற்றிலை பாக்கினை பயன்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டது.

அதற்கமைய வெற்றிலை பாக்கினை அரச நிறுவன வளாகங்களில் பயன்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.