இந்திய ரசிகர்களுக்கு.. தக்க பதிலடி கொடுத்த ஆஸி., வீரர்.!

உலக கிரிக்கட் வரலாற்றில் தவிர்க்க முடியாத கேப்டன், தவிர்க்கமுடியாத விக்கெட் கீப்பர், தவிர்க்கமுடியாத அதிரடி ஆட்டக்காரர் மொத்தத்தில் கிரிக்கெட்டில் தவிர்க்கமுடியாத ஒரு வீரர் என்றல் அது நம்ம தோணி மட்டும் தான்.

ஒரு வீரருக்கு உச்சகட்ட புகழ்ச்சியும், இகழ்ச்சியும் கிடைத்து இருக்குமானால் அது நம்ம தோணியாக தான் இருக்க முடியும்.

அவர் வெற்றிக்கு காரணமாக இருக்கும் போதெல்லாம் அவரை பாராட்டும் இந்திய ரசிகர்கள். தோல்வியடைந்தால் தோனிக்கு வயசாயிடுச்சு. ஓய்வை அறிவிக்க சொல்லுங்க என்று புலம்ப ஆரம்பித்து விடுகின்றனர்.

ஆனால், தோணி என்றுமே தோணி தான். அனைத்து ஆட்டங்களிலும் அவர் தன முழு திறமையையும் வெளிப்படுத்திவருகிறார். இது அவரின் உண்மையான ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இப்படி இருக்க. தோணியை விமரிசிக்கும் புல்லுருவிகளுக்கு தக்க பதிலடியை ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் கொடுத்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது, ”ஒரு ஆட்டத்தின் நிலை தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கையில், மிகவும் அனுபவம் வாய்ந்த தோனி போல் ஒருவர் அணியில் இருக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் அணியில் இருக்க வேண்டும்.

அவரின் ஓய்வு பற்றி, ஆட்டம் பற்றி விமர்சனம் செய்யும் அந்த நபர்கள், தான் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் உளறி கொண்டு இருக்கின்றனர்” என்று தான் சொல்ல வேண்டும்.