மனைவியை தாக்கி காயப்படுத்திய கணவன்!

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவியை தாக்கி காயப்படுத்திய கணவன் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

பூநகர், ஈச்சிலம்பற்று பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக கணவன் சாராயம் குடித்து விட்டு வீட்டுக்கு சென்று மனைவியை மூர்க்கத்தனமாக தடியால் தாக்கியுள்ளார்.

இதனால் காயமடைந்த மனைவி சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.