பெண்கள் கருத்தரிப்பதில் உள்ள பெரும் பிரச்சனைகள்.!!

இருதய நோயை பொறுத்த வரையில்., பிறக்கும் போதே இருதய நோயுடன் பிறக்கும் குழந்தைகள் மற்றும் வளரும் பருவத்தில் ஏற்படும் பிரச்சனையால் இருதய நோய்யால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் என்று இரு வகைகளாக பிரிக்கலாம்.

பொதுவாக பெங்களுக்கு சுமார் 5.5 லிட்டர் அளவு இரத்தமானது உடலில் இருக்கும். இந்த இரத்தத்தின் அளவானது கர்ப்ப காலத்தில் சுமார் 30 விழுக்காடு அளவிற்கு அதிகரிக்கும். இந்த அதிகரிப்பானது கர்ப்பத்தின் 10 வது வாரம் முதல் 12 ம் வாரத்தில் வெகுவாக அதிகரிக்கும்.

இதன் மூலமாக இருதயமானது அதிக வேகத்துடன் இயங்கும்., இதன் காரணமாக இரத்த குழாய்கள் அனைத்தும் விரிவடைய துவங்கும். இதன் மூலமாக இருதயம் ஆரோக்கியமாக இருக்கும் பெண்கள் எந்த விதமான பிரச்சனையும் இல்லை. இருதய பிரச்சனைகள் இருக்கும் பெண்களின் இதயத்தால் இந்த நடவடிக்கையை ஈடு செய்ய இயலாது.

இந்த பிரச்சனையை அலட்சியமாக நினைத்து கருத்தரிக்கும் பட்சத்தில் சுமார் 10 வது வாரம் முதல் 12 வது வாரத்திற்குள் கருவானது கலையலாம். பெண்களின் இதயமானது மேலும் பலவீனமடைந்து., அதிகளவில் இரத்தம் உறைந்து., மூளை மற்றும் நுரையீரலுக்கு செல்லும் இரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதன் மூலமாக பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.

இந்த பிரச்சனைகள் அனைத்தும் தனது அபாய கட்டத்தை எட்டும் பட்சத்தில் மரணம் கூட நேரலாம். பிறவியில் இருந்து இருதய குறைபாடுகள் இருக்கும் பெண்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று., தேவையான மருந்துகளை எடுத்து கொண்ட பின்னர் கருத்தரிப்பது நல்லது.

இருதய வால்வு சம்பந்தமான கோளாறுகள் இருக்கும் பெண்கள் மற்றும் இருதய அடைப்புகள் உள்ள பெண்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னர் கருத்தரிப்பது நல்லது. அவர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டு., மருத்துவரின் ஆலோசனைக்கு பின்னர் கருத்தரிப்பது நல்லது. மருத்துவரின் ஆலோசனை படி கருத்தரித்தாலும்., அவ்வப்போது இருதய மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.