சிறுத்தை அருகே செல்பி எடுக்க முற்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி!

அமெரிக்காவில் சிறுத்தை அருகே நின்று செல்பி எடுக்க முற்பட்ட பெண்ணை, சிறுத்தை அவரின் கைகளில் கடித்ததால், அவர் வலி தாங்க முடியாமல் துடித்த வீடியோ வெளியாகி பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Arizona மாகாணத்தின் Litchfield-ல் இருக்கும் வன விலங்கு பூங்காவிற்கு பெயர் தெரிவிக்கப்படாத இளம் ஒருவர் நேற்று வந்துள்ளார்.

அப்போது அவர் கூண்டின் உள்ளே இருந்த கருஞ்சிறுத்தை அருகே இருக்கும் படி செல்பி எடுக்க முயன்றுள்ளார்.

இதற்காக அவர் கூண்டில் இருக்கும் கம்பியை பிடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த சிறுத்தை திடீரென்று இவரது கையை பிடித்து கடிக்க ஆரம்பித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் உடனடியாக கத்தியுள்ளார். அருகில் இருந்த நபர்கள் உடனடியாக தங்கள் கையில் இருந்த வாட்டர் பாட்டில்கள் போன்றவைகளை வீசியுள்ளனர்.

அதன் பின் ஒரு வழியாக அவர் சிறுத்தையிடமிருந்து மீட்கப்படார். மீட்கப்பட்ட அவருக்கு கைகளில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.

இதனால் அவர் வலி தாங்க முடியாமல் கீழே விழுந்து துடி துடித்தார். அப்போது உடன் இருந்தவர்கள் உதவ, பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.