கதறி தேம்பி அழுதபடியே வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை நிலானி!

பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட காமக்கொடூர கும்பல் சமூகவலைத்தளங்கள் மூலம் 200க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி அவர்களை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் அந்த காமக்கொடூர மிருக கும்பலிடம் இளம்பெண் ஒருவர் சிக்கி தவித்து துடிதுடித்து கதறும் வீடியோ ஒன்று வெளியானது. மேலும் அதனை காண்போர் அனைவரின் உள்ளத்தையும் பதைபதைக்கும் வகையில், இரத்தம் கொதிக்கும் வகையிலும் இருந்துள்ளது.

மேலும் அவர்களுக்கு உடனே தக்க தண்டனை அளிக்கப்பட வேண்டும், அவர்களை மன்னிக்கவே கூடாது என்ற கோப குரல்கள் பல பக்கமும் எழுந்த வண்ணம் உள்ளது.இதனை தொடர்ந்து அந்த கும்பலில் இருந்து கொடூர மிருகங்கள் 4 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர் . மேலும் தற்போது அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரபல சீரியல் நடிகை கதறலுடன் கொந்தளித்து போன வீடியோ ஒன்றை உணர்வுபூர்வமாக வெளியிட்டுள்ளார். அதனை வீடியோவில் அவர் மிகவும் ஆக்ரோஷமாக பேசியுள்ளார். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.