வெற்றிபெறுமா ஆஸி?

தவான் மற்றும் ரோகித் சர்மாவின் அபார ஆரம்பம் காரணமாக அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 358 ஓட்டங்களை குவித்துள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியாவுடன் விளையாடி வருகிறது.

இதில் முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், 3 ஆவது ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவும் வெற்றிபெற்று, தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான நான்காவது ஒரு நாள் போட்டி மொகாலியில் இன்று பகலிரவு ஆட்டமாக ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் தவான் சிறப்பான இணைப்பாட்டத்தை பெற்றுக் கொடுக்க இந்திய அணி விக்கெட் இழப்பின்றி முதல் 10 ஓவரில் 58 ஓட்டங்களையும், 20 ஆவது ஓவரில் 114 ஓட்டங்களையும் 30 ஆவது ஓவரில் 182 ஓட்டங்களையும் பெற்றது.

எனினும் 30 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் ரோகித் சர்மா 92 பந்துகளில் 7 நான்கு ஓட்டம் 2 ஆறு ஓட்டம் அடங்களாக 95 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட தவான் 31 ஆவது ஓவரின் இறுப் பந்தில் தவான் 97 பந்துகளை எதிர்கொண்டு சர்வதேச ஒருநாள் அரங்கில் 16 சதத்தை பூர்த்த செய்து, 37.4 ஆவது ஓவரில் 143 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

இறுதியாக இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 358 ஓட்டங்களை பெற்றது. ஆடுகளத்தில் குல்தீப் யாதவ் எதுவித ஓட்டமின்றியும் பும்ரா 6 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

அவுஸ்திரேலிய அணி சார்பில் பந்து வீச்சில் பேட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுக்களையும் ரிச்சண்டர்சன் 3 விக்கெட்டுக்களையும் சாம்பா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனால் அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றியிலக்காக 359 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.