சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து….!!

யாழ் நீர்வேலியில் சற்று முன்னர் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று பிற்பகல் 4:00 மணியளவில் யாழ் பருத்தித்துறை வீதி நீர்வேலியில் பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் ரக வான் ஒன்று. ரயர் திடீரென வெடித்தில் வேகக் கட்டுப்பாட்டையிழந்து வீதியில் அருகில் இருந்த வீட்டின் மதிலுடன் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் எவருக்கும் தெய்வாதீனமாக காயங்கள் எவையும் ஏற்படவில்லையெனவும் கூறப்படுகின்றது .சம்பவம் தொடர்பில், குறித்த விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அண்மைக்காலமாக குடாநாட்டில் இவ்வாறான மோசமான வாகன விபத்துக்கள் தினமும் இடம்பெற்று வருகின்றமை குறிப்படத்தக்கது.