தமிழ் சிறுவனுக்கு ஹாலிவுட்டிலிருந்து குவியும் பாராட்டுக்கள்: கண்கலங்கிய தந்தை!

வெளிநாட்டு இசை நிகழ்ச்சி ஒன்றில் 12 வயது சிறுவன் செய்திருக்கும் சாதனையை பார்த்து உலகம் முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

உலகின் பல பகுதிகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சியின் மூலம், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில் உலக அளவில் புகழ்பெற்ற இசை மேதைகள் நடுவர்களாக இருந்த நிகழ்ச்சி ஒன்றில், சென்னையை சேர்ந்த 12 வயது சிறுவர் லிடியான் நாதஸ்வரம் பங்கேற்றுள்ளார்.

அந்த மேடையில் லிடியானின் கைகள் பியானாவில் விளையாடுவதை பார்த்து நடுவர்கள் உட்பட அரங்கமே மெய்சிலிர்த்து கைதட்ட ஆரம்பித்துவிட்டது.

இதனை ஹாலிவுட் நடிகரும் பாடகருமான ஜேமஸ் கார்டென் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உட்பட பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.