டிக் டாக்கால் பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…

டிக்டாக் வீடியோக்களுக்கு அடிமையாகி பெண் ஒருவர் நொடிப்பொழுதில் பரிதாபமாக உயிரிழந்த காட்சி தற்போது பெரும் வைரலாகி வருகிறது.

தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வரும் டிக் டாக்கில் இளம் தலைமுறையினர் எந்நேரமும் மூழ்கியுள்ளனர். டான்ஸ் ஆடுவது, மிமிக்ரி என அவர்கள் செய்யும் அக்கப்போருக்கு அளவே இல்லை. சில அடாவடிகள் சீன் காட்டுவதாக நினைத்து சிக்கலில் சிக்குகின்றனர்.

இளம்பெண்கள் யாரும் சமூகவலைதளங்களில் தங்களின் போட்டோவையோ வீடியோவையோ போட வேண்டாம், அப்படி செய்தால் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என குடும்பத்தாரும் பொலிஸாரும் பல அறிவுரைகளை கூறினாலும் சிலர் கேட்காமல் இருக்கின்றனர்.

இங்கு வெளிநாட்டு பெண் ஒருவர் டிக் டாக் காணொளியின் போது நேர்ந்த அசம்பாவிதத்தால் நொடிப்பொழுதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.