திருமணம் முடிந்த நேரத்தில் புகுந்த மணப்பெண்ணின் முன்னாள் காதலன்.! பதறிப்போன கணவன்!

இலங்கையில் உள்ள சிலாபம் தாப்பவத்தை பிரதேசத்தை சார்ந்தவர் ஜெராட் ரொஷான் மலிந்த (27). இவருக்கும் ராகம பிரதேசத்தை சேர்ந்த மதீரா செவ்வந்தி என்பவருக்கும் கடந்த 25 ம் தேதியன்று திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து சிலாபம் பிரதேசத்தில் இருந்தனர். இந்நிலையில்., கடந்த 27 ம் தேதியன்று வீட்டை விட்டு வெளியேறிய இவர் மீண்டும் இல்லத்திற்கு திரும்பவில்லை.

தனது மனைவியை காணாது பல இடங்களில் தேடி சென்ற கணவர்., மனைவியை காணாததால் விஷயம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அந்த சமயத்தில்., ஜெராட் ரொஷான் மலிந்தன் மனைவியின் முன்னாள் காதலர் அவரை கடத்தி சென்றதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபரை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.