வெளிநாட்டுக்கு மனைவியை அனுப்பிய கணவன்… வேறு பெண்ணுடன் திருமணம்…

மனைவியை வேலைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்து விட்டு உள்ளூரில் இரண்டாம் திருமணம் செய்ய முயன்ற கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் கிஷோர் (30). இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 2015-ல் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின்னர் அமெரிக்காவில் மனைவிக்கு வேலை கிடைந்த சூழலில் அங்கு அவரை அனுப்பி வைத்தார் கிஷோர்.

இதன்பின்னர் கிஷோரை அமெரிக்காவுக்கு அழைக்க நினைத்து அவருக்கு விசா வாங்க மனைவி முயன்றார்.

ஆனால் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆனால் கிஷோருக்கு அவர் மனைவி தொடர்ந்து பணம் அனுப்பிய நிலையில் அதை வைத்து அவர் சொந்த வீடு வாங்கினார்.

அதே சமயத்தில் வேறு ஒரு பெண்ணுடன் கிஷோருக்கு தொடர்பு ஏற்பட்டது. மனைவிக்கு தெரியாமல் அப்பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் கிஷோருக்கு நடந்தது.

இது தொடர்பான புகைப்படங்கள் பேஸ்புக்கில் பதியப்பட்ட நிலையில் அதை கிஷோரின் மனைவி பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் உடனடியாக இந்தியாவுக்கு வந்த அவர் கிஷோர் மீது பொலிசில் புகார் அளித்தார்.

இதையடுத்து முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாம் திருமணம் செய்ய முயன்ற கிஷோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.