வீடியோவால் சிக்கிய இளைஞன்!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் பணத்துக்கு ஆசைப்பட்டு தமது முன்னாள் வகுப்புத் தோழியை படுகொலை செய்த நபரை பொலிசார் நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தியுள்ளனர்.

நியூ ஜெர்சி மாகாணத்தில் தற்கொலை என கருதப்பட்ட இளம்பெண்ணின் மரணம் தொடர்பாக வெளியான வீடியோ ஒன்று அதிர்ச்சி திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

லியாம் மெக்டாஸ்னி என்ற இளைஞர் தமது நண்பரிடம் ரகசியமாக கூறிய தகவலை, அந்த நண்பர் பதிவு செய்து விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

அதில், லியாம் மெக்டாஸ்னி, அந்த கொலையை செய்வதற்கு தமக்கு 30 நிமிடங்கள் மட்டுமே போதுமானதாக இருந்தது எனவும், தமது மொபைலில் அதற்கான நேரத்தை குறிப்பிட்டு வைத்ததாகவும் அவர் அந்த நண்பரிடம் தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில், அப்போது 19 வயதேயான சாரா ஸ்டெர்ன் என்பவரின் பரம்பரைச்சொத்து மீது அவரது சக மாணவரான லியாம் மெக்டாஸ்னி என்பவருக்கு ஒரு கண் இருந்துள்ளது.

இதனையடுத்து கொள்ளையடிக்கும் நோக்கில் திட்டமிட்ட லியாம், நேரடியாக சாரா ஸ்டெர்ன் குடியிருப்புக்கே சென்றுள்ளார்.

இந்த நிலையில் சாராவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள லியாம், தமது உதவிக்கு நண்பரான பிரஸ்டன் டெய்லரை அழைத்துள்ளார்.

இருவரும் சேர்ந்து சாராவின் உடலை Route 35 பாலத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். சாராவை கொலை செய்வதன் மூலம் தாம் பணக்காரனாகி விடலாம் என கருதிய லியாம்,

பணம் இருக்கும் இடத்தில் சென்று பார்த்தபோது ஏமாந்துள்ளதாக கூறப்படுகிறது.

50,000 முதல் 100,000 டொலர் வரையில் சாராவிடம் பணம் இருக்கும் என கருதிய லியாமுக்கு வெறும் 8,000 டொலரே மிஞ்சியுள்ளது. அதுவும் மிகவும் பழைய தாள்கள் அவை என லியாம் தமது நண்பரிடம் பின்னர் கூறியிருந்தார்.

இதனிடையே 2016 டிசம்பர் 3 ஆம் திகதி சாரா மாயமானதாக தகவல் வெளியானது. இந்த வழக்கில் சாரா மற்றும் லியாமுடன் பாடசாலையில் ஒன்றாக பயின்ற அந்தோனி கர்ரி என்பவரின் மொபைல் வீடியோவே முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது.

லியாம் தமது குற்றத்தை அந்தோனி கர்ரியிடம் தகவலுக்காக கூறியுள்ளார். ஆனால் கர்ரி அதை ரகசியமாக பதிவு செய்து, விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த வழக்கில் இதுவரை விசாரணை அதிகாரிகளால் சாரா ஸ்டெர்ன் உடலை கைப்பற்ற முடியவில்லை.

கர்ரியின் ஒப்புதல் வாக்குமூலத்தை அடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு லியாம் மெக்டாஸ்னி மற்றும் பிரஸ்டன் டெய்லர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.