ரஜினி மகள் செளந்தர்யா… களைகட்டும் திருமணம்!

பிரபல திரைப்பட நடிகர் ரஜினி மகள் செளந்தர்யாவின் திருமணத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினியின் இளையமகள் செளந்தர்யாவிற்கும், தொழிலதிபரும், நடிகருமான விசாகன் வணங்காமுடிக்கும் இன்று சென்னையில் உள்ள Leela Palace Hotel-லில் காலை 9 மணியிலிருந்து 10.30 மணிக்குள் திருமணம் நடைபெற்றது.

மகள் திருமணத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் கமல் உட்பட பல முக்கிய பிரபலங்களை நேரில் சந்தித்து பத்திரிக்கை வைத்து ரஜினி அழைப்பு விடுத்திருந்தார்.

ரஜினியின் மிக முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமண விழாவில் கலந்து கொள்கின்றனர்.

அந்தவகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜு, தங்கமணி ஆகியோர் அவருடன் சென்றிருந்தனர்.

இதேபோல், நடிகரும் மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவருமான கமல், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் இந்த விழாவில் பங்கெடுத்துள்ளனர்.

திருமணம் முடிந்ததும், அதே லீலா பேலஸில் பகல் 11 மணி முதல் மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த திருமண விழாவில் செளந்தர்யா பட்டுச் சேலை மற்றும் நகையில் அழுகு தேவதையாக ஜொலித்தார். இவர்களின் திருமணத்திற்கு வந்த திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் புகைப்படங்கள் இதோ.