மனிதர்களின் ஆயுள் குறைவது இதனால் தானாம்….!!

மனித ஆயுள் பிறக்கும்போது நிர்ணயம் செய்யப்படுகிறது என்று தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், உண்மையில் ஒருவரின் ஆயுள் என்பது அவர்கள் பூமியில் செய்யும் சில செயல்களைப் பொறுத்துதான் இருகின்றன.

மேலும், ஒருவரது ஆயுள் குறைய காரணமாக உள்ள முக்கியமான 6 செயல்களைப் பற்றி தெரிந்து கொண்டு அந்த செயல்களை தவிர்த்து நீண்ட ஆயுள் வரை வாழ முயற்சி செய்யுங்கள்.

அதிக கர்வம் கொள்ளுதல்:

கர்வம் அதிகமாக இருப்பவர்களை கடவுள் சீக்கிரமாகவே அழித்துவிடுவார். தான் செய்யும் விடயங்களில் என்னென்ன குற்றங்கள் இருக்கிறது என்று தெரிந்து ஆராய்ந்து ஒப்புக் கொள்பவர்களாகவும் அடுத்தவர்களுடைய விடயங்களில் இருக்கும் நல்ல குணங்களைப் பார்த்து பாராட்ட வேண்டும்.

பிறரைப்பற்றி பேசுதல்:

பிறரை பற்றி எப்பொழுதும் புறம் பேசிகொண்டிருப்பது. இதனை விளக்கவே மகாபரதத்தில் கடுமையும் உண்மையும் பிரியமும் உள்ள வார்த்தைகள் எதுவோ அந்த வார்த்தைகளை மட்டும் தான் பேசுவது தான் தவமான வாழ்க்கை என்று கூறியுள்ளன.

பேராசை:

எல்லா விடயங்களையும் நாம் மட்டுமே தான் அனுபவிக்க வேண்டும் என்ற அதீத ஆசையின் காரணமாக நம்முடைய தியாக மனப்பான்மை அழிந்துவிடும். நாம் இந்த உலகத்தில் பிறந்ததே அடுத்தவர்களுக்கு உதவுவதற்கு என்ற தியாக மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கோபம்:

கோபத்தை வென்ற ஒருவனால் தான் யோகியாக இருக்க முடியும். எது தர்மம், எது அதர்மம் என்று ஆராய வேண்டும். நாம் யார் மீதும் கோபப்படக்கூடாது. அதேசமயம் யாராவது நம்மீது கோபப்பட்டால், அதை சகித்துக் கொள்கிற மனப்பாங்கு இருக்க வேண்டும்.

சுயநலம்:

சுயநலம் நம்முடைய மனதில் இருக்கும் அன்பு, கருணை ஆகியவற்றை அழித்துவிடும். அடுத்தவர்கள் இன்பமாக இருப்பதைக் கண்டு, நாமும் இன்புற வேண்டும் என்று நினைப்பது மிக மிக தவறு.அடுத்தவர்கள் கஷ்டப்படுவதைக் கண்டு நாமும் மனதால் கஷ்டப்பட்டால் தான் சுயநலம் நம்மை விட்டு அழிந்து போகும்.

துரோகம்:

எல்லோரிடமும் எந்த விருப்பு வெறுப்புமின்றி, நட்பு மனப்பான்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். அடுத்தவர்கள் மீது கருணை செலுத்த வேண்டும்.