கள்ளக்காதலால் ஏற்பட்ட விபரீதம்….!

திண்டுக்கல் மாவட்டம் பழனி சிவகிரிப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 24). இவர் மோகனப்ரியா (வயது 21) என்ற பெண்ணை இரண்டு வருடங்களுக்கு முன்பாக, தேடித் தேடிக் காதலித்தார்.

பின், இருவரும், பெற்றோரை சமாதானப் படுத்தி, திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு, ஒரு பெண் குழந்தை உள்ளது.

காதல் என்பது, திருமணத்திற்குப் பிறகு, வாழ்நாள் முழுவரும் தொடர வேண்டிய பந்தம். ஆனால், இந்தக் காதல் தம்பதிகளுக்குள் ஏற்பட்ட சிறு சிறு பிரச்சினைகள், பூதாகரமாகின. இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதன் காரணமாக, நான்கு மாதங்களுக்கு முன்பாக, பழனி தட்டான்குளத்தில் உள்ள தன் தாய் வீட்டிற்குச் சென்றார் மோகனப்ரியா.

பின், அந்தப் பகுதியில் உள்ள கார்த்தி (வயது 21) என்பவரைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு நாளடைவில், கள்ளக் காதலாக மாறியது. இருவரும் பல முறை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பது போல, சில நாட்களிலே கார்த்திக்கு, மோகனப்பரியா அலுத்துப் போனார். இதனால், அவருடன் சரியாகப் பேசாமல் இருந்தார்.

இதனால், அவரைச் சமாதானப் படுத்துவதற்காக, ஆயக்குடியில் உள்ள, கார்த்தியின் தோட்டத்திற்குச் சென்றார். மோகனப்ரியா. ஆனால், அங்கும் கார்த்தி அவருடன் பேசவில்லை. பின், சிறிது நேரத்தில், இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது.

அந்தக் கோபத்தில், தோட்டத்தில் செடிகளுக்காக வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து, மோகனப்ரியா குடித்து விட்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கார்த்தி, அவரைத் துாக்கிக் கொண்டு, பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், சிகிச்சை பலன் இன்றி மோகனபிரியா இறந்து போனார்.

இதனால், தன் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைப்பார்கள், என்று பயந்து போன கார்த்தி, தானும் பூச்சி மருந்தைச் சாப்பிட்டு, தற்கொலை செய்து கொண்டார்.