நடிகர் ஆரவ்க்கு ஏற்பட்ட விபரீதம்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் ஆரவ். பிக்பாஸ் வீட்டில் இவரை ஓவியா காதலித்தார். மேலும் அவருக்கு ஆரவ் கொடுத்த மருத்துவ முத்தத்தாலும் அவர் மிகவும் பிரபலமானார்.

பின்னர் ஆரவ் பிக்பாஸ் சீசன் 1 ன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். மேலும் அதனை தொடர்ந்து அவருக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

மேலும் அவர் தற்போது ராஜ பீமா படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் நரேஷ் இயக்குகிறார். மேலும் சுரிபி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.

ராஜ பீமா காடு சம்பந்தப்பட்ட படம் என்பதால் அதன் படப்பிடிப்பு கஞ்சன்புரியின் அடர்ந்த காடுகளில் நடந்து வருகிறது. இப்படத்தில் ஒரு யானை பிரதான வேடத்தில் நடிக்கிறது. இந்நிலையில் ஆரவ் யானை மீது அமர்ந்திருப்பது போல் ஒரு காட்சி எடுக்கப்பட்டது.

அப்போது ஆரவ் யானையிலிருந்து தவறி கீழே விழுந்தார். பின்னர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதற்கு பின் ஆரவ் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இதனால் படப்பிடிப்பில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.