என் வாழ்க்கையில் முக்கியமான 3 ஆண்கள்! ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் செளந்தர்யா வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

செளந்தர்யா, சென்னையை சேர்ந்த அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர் ஏற்பட்ட மனக்கசப்பால் செளந்தர்யாவும், அஸ்வினும் விவாகரத்து பெற்றனர்.

இதையடுத்து நடிகரும், தொழிலதிபருமான விசாகன் என்பவரை செளந்தர்யா இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார் என அறிவிக்கப்பட்டது.

இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இரு தினங்களுக்கு முன்னர் நடந்த நிலையில் நாளை திருமணம் நடக்கவுள்ளது.

இந்நிலையில் தன் வாழ்க்கையில் மூன்று முக்கியமான ஆண்கள் என தனது தந்தை ரஜினிகாந்த், மகன் வேத் கிருஷ்ணா மற்றும் கணவர் விசாகன் என மூவரின் புகைப்படங்களையும் செளந்தர்யா டுவிட்டரில் வெளியிட்டு நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.