இந்திய-நியூசிலாந்து டி20 போட்டியில் நடந்த அதிசயம்.!!

இந்தியா-நியூசிலாந்து இடையேயான டி20 தொடா் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.

இரு அணிகளும் சமநிலையில் உள்ளதால், இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் தீவிரமாக உள்ளனர். இரு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹாமில்டன் மைதானத்தில் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கியது.

மற்றும் ஒரு தொடக்க ஆட்டக்காரரான கொலின் முன்றோ (Colin Munro) தற்போது வரை 32 பந்துகளில் 4 சிக்ஸர், 4 போர் 59 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடி வருகிறார். நியூசிலாந்து அணி தற்போது வரை ஓவர்களில், விக்கெட் இழப்பிற்கு, ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்த போட்டியின் ஸ்கோர் போர்டில் ஒரு அதிசிய நிகழ்வு நடந்துள்ளது. அதாவது நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 11.1 ஓவர்களில் 111 எடுத்து இருந்தது தான் அந்த அதிசயம். இதுபோன்று எப்போதாவது ஒருமுறை தான் ஸ்கோர் போர்டில் ஒரே மாதிரியான எண்கள் வரும் இதனை இந்திய ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றனர்.